முக்கிய விரதங்கள் நிறைந்த கார்த்திகை மாதம் தொடங்கியது மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் முறைப்படி விரதத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது. கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து, ஐயப்ப விரதம் துவங்கி, ஒரு மண்டலம் என்னும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடித்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம். விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் லௌகீக வாழ்வில் ஈடுபடாமல், மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து, ஐயப்ப விரதம் கடைபிடிக்க வேண்டும். ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக மாலையில், ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிந்து கொள்ளுதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். மேலும் கறுப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி ஸ்வாமிகள் கறுப்பு நிற ஆடைகளை மட்டும் அணிந்து கொள்ள வேண்டும். காலை, மாலை குளிர்ந்த நீரில் நீராடி விட்டு பின்னர், ஐயப்பனுக்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து, 108 முறை சரண கோஷம் செய்து வழிபடவேண்டும்.
விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல் இகடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.
விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி நிறைவு செய்யும் போதும் “ஸ்வாமி சரணம்” என்று கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்பாக, மாலையை எந்த விதமான காரணம் கொண்டும் கழட்டுதல் கூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.
விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது. இரவில் பாய் தலையணை என்பவற்றை தவிர்த்து, அணிந்திருக்கும் வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கபட வேண்டும். மாதவிலக்கான பெண்களை பார்ப்பதும், அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபாடு நிகழ்த்த வேண்டும்.12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.