Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பண்ணாரி மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா துவக்கம்..

பண்ணாரி மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா துவக்கம்..

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்துகொள்வார்கள்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு குண்டம் விழா வரும் ஏப்ரல் 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக அம்மனிடம் பூ உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்காண சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், காளி திம்பம் ஆகிய 5 ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தனித்தனியாக தாரை தப்பட்டை முழங்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

இதையடுத்து கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தை தலையில் வைத்தபடி பண்ணாரியை சுற்றியுள்ள சிவன், மாரியம்மன், சருகு மாரியம்மன், ராகு, கேது, முனியப்பன் சாமி, வண்டி முனியப்பன் சாமி கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் பண்ணாரி அம்மன் சிலை மீது வெள்ளை அரளி மற்றும் சிகப்பு அரளி பூ வைத்து குண்டம் விழாவுக்கு உத்தரவு கேட்கப்பட்டது. அப்போது வெள்ளை பூ விழுந்ததால் அம்மன் குண்டம் விழாவு