“நான் இங்கு தேடினேன் .நீ அங்கிருந்தாய்” தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம்
செய்யும் பொருட்டு பெண் ஒருவர்.தன் பெண்
குழந்தையுடன் வந்திறங்கினார். மடத்தை
நெருங்கும் சமயம் தான் தன் கையைப்
பிடித்துக் கொண்ட வந்த அந்தப் பெண்ணைக்
காணவில்லை என்பதை அறிந்தாள் அப்பெண்.
எங்கு தேடியும் காணவில்லை. ஸ்வாமிகளை
சரணடைந்தாள். கண் மூடி தியானத்தில்
அமர்ந்திருந்தார்கள் பெரியவா.“காளிகாம்பா கோவிலுக்குச் சென்று, ‘என் குழந்தையை என்னிடம் ஒப்படை’ என்று
சீட்டில் எழுதி காணிக்கையுடன் உண்டியலில்
சேர்த்துவிடு” என்று கூறினார்கள்.
உடல் பதற சென்ற அந்தப் பெண்ணும் சீட்டு
எழுதி காணிக்கையுடன் உண்டியலில் சேர்த்தாள்.
தாயே என் மகளைத் திருப்பிக்கொடு என்ற
வேண்டுதலுடன் வெளியே வந்தாள்.
கோவிலின் வாசலில் அம்மாளின் பெண் அழுது
கொண்டு நின்றிருந்தது.
தாயே என்று வணங்கி விட்டு, தன் குழந்தையுடன்
பெரியவாளிடம் வந்தாள்.
“என்ன பிரார்த்தனை நிறைவேறியதா?” என்றார்கள் ஸ்வாமிகள்.
“காளிகாம்பாள் கருவறையில் எனக்குக் காட்சி கொடுத்தது பெரியவா. இங்கே என் முன் காளிகாம்பாள் தான் தெரிகிறாள்”என்றபடியே
விழுந்து வணங்கினாள்.‘நான் இங்கு தேடினேன் .நீ அங்கிருந்தாய்
.நான் அங்கு சென்று பார்த்தேன்
.நீ இங்கே நின்றிருந்தாய்
.பிரபஞ்ச வெளியில் நீ
.எங்கும் நிறைந்தாய்
.உன்னை நான் காணாவிடில்


