காஞ்சி மகாசுவாமிகள் பற்றி சுத்தானந்த பாரதியார்

Published:

காஞ்சி மகாசுவாமிகள் பற்றி சுத்தானந்த பாரதியார்734324_514749501889171_935875765_n காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம். ‘இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன். “தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான் ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான் ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ் ஞானவான் – காமகோடி நாதனை நம்புவோமே” அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார். மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img