கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 4)

sai baba1 - 2026

வேதங்களிலும் புராணங்களிலும் உள்ள கதைகளில் நேரடியாக தெரியும் கருத்துக்கள் உண்மை கருத்துக்கள் அல்ல. அவற்றின் கருத்துக்கள் இவ்வுலக ஆசைகளை குறிப்பன அல்ல மறைமுகமாக வேதாந்த கருத்துகளை குறிக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு குருவின் துணை அவசியம்

பாபாவின் சொற்களும் கூறும் கதைகளும் செயல்பாடுகளும் மக்களுக்கு மறைமுகமாக பொருளை உணர்த்துவதாக இருந்தன என்றும் அதனை பாபாவின் அருளால் சிலரால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிந்தது எனவும் பல பக்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒருமுறை பாபா நிறைய கோதுமையை வாங்கி வந்து மசூதிக்குள் வைத்து அ ரைத்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பாபாவே அரைத்து கொண்டிருந்தார். இச்செய்தி சீரடி முழுவதும் பரவியது. கேள்வியுற்ற பல பெண்கள் பாபா கோதுமை அரைக்கும் அழகைக் கண்டு சிறிது நேரம் நின்று ரசித்து கொண்டிருந்தனர்.

தங்களுக்குள் பேசிக் கொண்ட பெண்கள் எதற்காக பாபா கோதுமை அ ரைக்கிறார். என கேட்டார்கள் அதற்கு மற்றவள் நமக்கு கொடுப்பதற்காகத்தான் அ ரைக்கிறார் என்றாள் மற்றொருத்தி. இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கும். நமக்கு கொடுப்பதற்கு என்றால் ஏன் அ ரைக்க வேண்டும் அப்படியே கொடுத்திருக்கலாமே என்றாள் இன்னொருத்தி.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே தன் காரியத்தை செய்து கொண்டிருந்தார். அவர்களில் தைரியமிக்க நான்கு பெண்கள் பாபா எங்களுக்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் நாங்களே அ ரைக்கிறோம் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாபாவிடமிருந்து வாங்கி அரைத்தார்கள்.

பாபாவும் புன்னகையுடன் அவர்கள் செயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் . சில மணி நேரத்தில் அவர்கள் கோதுமை முழுவதையும் அரைத்து விட்டு கோதுமை மாவை தங்களுக்குள் பிரித்து வைத்துக்கொண்டு எடுத்துச் செல்வதற்கு அனுமதி கேட்க பாபா மிகுந்த கோபம் கொண்டவராய் யாருடைய பொருளை யார் எடுத்துச் செல்வது என்று கத்தியவர்… அதே கோபத்தோடு முழு கோதுமை மாவையும் ஊர் எல்லையில் கொட்டி விட்டு வாருங்கள் என்றார்.

பாபாவின் கடுமையான சொற்களால் சொன்ன படியே செய்தார்கள். பாபா ஏன் கோதுமை மாவை அரைத்தார் என்பதன் காரணம் பின்னர் வந்த நாட்களில் புரிந்தது பிற ஊர்களில் பரவிய காலரா தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்தார் என புரிந்து கொண்டார்கள். ஆனால் இதற்குப் பொருள் ஞானம் எனும் கைப்பிடி கொண்டு பக்தி கர்மம் என்ற நமது தீய குணங்களை அ ரைத்து வெளியில் கொட்ட வேண்டும் என்பதாகும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலரா பரவி வந்தது அதனால் கிராம அதிகாரி வெளியிலிருந்து பொருட்களையும் விறகுகளையும் கொண்டு வருவதற்கு தடை செய்து இருந்தார். இதனால் ஏழை மக்கள் விறகு இல்லாமல் தவித்தனர்.

அந்த சமயத்தில் ஊருக்குள் ஒரு விறகு வண்டி வந்தது அதை ஊர் மக்கள் விரட்டிக் கொண் டு வந்தனர். அங்கு வந்த சாய்பாபா விறகு வண்டியை மசூதிக்கு கொண்டு செல்லுமாறு சொன்னார். பாபாவுக்கு எதிராக யாரும் பேசவில்லை மசூதிக்கு வந்த வண்டியில் அனைத்து விற குகளையும் பெற்றுக் கொண்ட பின்னர் சிலவற்றை கையில் ஏந்தி சுற்றி வந்தார்

பின்னர் அதை துணியில் இட்டார் வி றகு வண்டியின் பின்னாலேயே வந்த மக்களை அ டுக்கி வைக்கப்பட்ட விறகுகளை வேண்டி ய அளவு எடுத்து செல்லுமாறு சொன்னார் .பாபாவால் விறகுகள் பவித்ரமாக்கப்பட்டு விட்டன இனி நாம் தைரியமாக எடுத்துச் செல்லலாம் என கூறிக்கொண்டே மக்கள் எடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் முழுமையையும் காலியாகிவிட்டது.

பாபா வைத்த ஒரு பரீட்சை – பாபா பக்தர்களோடு மசூதி யுள் தங்கியிருந்த போது உடன் பக்கீர் முகமது பாபா, ராமதாஸ் உட்பட பலர் இருந்தார்கள். அச்சமயம் யாரோ ஒருவன் மசூதிக்குள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த ஆட்டை விட்டுச்சென்றான்.

முகமது பக்கீர் முகமது அலி பாபா என்பவர் பாபா வால் மிகவும் மதிக்கப்படுபவர் .அவருக்கு தினந்தோறும் 50 ரூபாய் தட்சணை தருவார் உணவு சாப்பிடும்போது தன் அருகில் அமர்த்திக் கொள்வார் அவர் வெளியில் செல்லும்போது அவர் வெளியில் சிறிது தூரம் பாபாவுடன் வந்து அனுப்புவார்.

இத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்த அவரை அழைத்து தன் முன் விட்டுச்சென்ற ஆட்டினை ஒரே வெட்டில் வெட்டுமாறு பணித்தார். பாபாவின் ஆணையை நிறைவேற்ற மறுத்ததுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக அவரை கோபிக்காமல் பக்கத்திலிருந்த தேஷ்பாண்டேவை அழைத்து வெட்டுக் கத்தி வாங்கி வருமாறு கூறினார். மறுப்பேதும் சொல்லாமல் அருகிலிருந்த ராதாகிருஷ்ண மாயி வீட்டிற்கு சென்று வெட்டு க் கத்தியை வாங்கி வந்தார்.

பாபாவின் அருகில் கத்தியை வைத்துவிட்டு அமைதியாக இருந்தார். ஷர்மாவின் பின்னாலேயே வந்த மாயி ஒரு உயிரை கொல்ல நம் கத்தி பயன்படுவதா எனக்கூறி எடுத்துச் சென்றுவிட்டார்.

கத்தி இல்லாததால் அதைப் பெறும் பொருட்டு வெளியில் சென்றவர் நெடுநேரம் திரும்பி வரவில்லை .இதனால் காக்கா தீட்சித்தை வெட்டுமாறு கூறினார். அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக வெளியில் சென்றார் அதை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். யாரையும் அதிர்ந்து பேசாதவர் எப்போதும் வேதத்தின் படி நிற்பவர் அப்படி இருக்க இப்படி வேகமாக செல்கிறாரே என நினைத்தனர்.

ஆனால் தீட்சித் இது குருவின் ஆணை எந்த நிலையிலும் குருவின் ஆணையை மீறக்கூடாது குரு காட்டும் வழியே நம்மை மேம்படுத்தும் மேம்படுத்துவதற்காக தான் இருக்கும் ..எப்படி தாய் பெரும் துன்பம் வராதிருக்க கசப்பான மருந்துகளை கொடுக்கிறாரோ அதுபோல்தான் என்று நினைத்துக்கொண்டே கத்தியுடன் நுழைந்தார் தீட்சித்.

பாபா முன் ஆடுகளை நிறுத்தி கத்தியை ஓங்கினார். அந்த சமயத்தில் நிறுத்து என ஆணையிட்டார் பாபா. பாபாவின் சொல்கேட்டு நிறுத்திய தீட்சிதிடம் ஆட்டை வெளியே விடு இன்னும் சற்று நேரத்தில் இதன் விதி முடியப்போகிறது. இருந்தபோதும் என் ஆணையை யார் நிறைவேற்று கி றார்கள் என்பதை அறியவே இவ்வாறு தான் நடந்து கொண்டதாகவும் விளக்கமளித்தார்.

இதன் மூலம் தீட்சித் பாபாவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அனைவரும் அறிந்தனர். இதன் பிறகு மேலும் பக்தியும் நம்பிக்கையும் கொண்டார் ஒருமுறை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் .மருத்துவர்கள் மருந்து எடுத்துக் கொள்ளும்படி சொல்லியும் அவ்வாறு செய்யாமல் பாபா சொன்னபடி படி நெய்யில் சீரகத்தை வறுத்து உண்டார்.

சொன்னபடியே காய்ச்சல் சிறிது சிறிதாக குறைந்தது. தனக்காக எதையும் கேட்காமல் வாழ்ந்தவர் மரணத்தில் மட்டும் கருணை காட்டுமாறு கேட்டார். எந்த கஷ்டமும் அனுபவிக்காமல் ஏகாதசி அன்று தங்களோடு கலந்திட வேண்டும் என்றார். அவ்வாறே செய்வதாக வாக்களித்து சமாதிக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஏகாதசி நாளில் சேர்த்துக் கொண்டார் பாபா.

அவர்களுக்கு மட்டுமல்ல பஞ்சபூதங்களுக்கும் கட்டளையிட்டு தன்வசப்படுத்தியதை சீரடி மக்கள் பலமுறை கண்டுள்ளார்கள்.

  • எழுத்து: குச்சனூர் தி. கோவிந்தராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories