திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!

Published:

thiruvannamalai kodi - 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உத்ஸவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய உத்ஸவ மூர்த்திகள் தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருளினர். அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட

பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் பிரமோத்ஸவ விழா நடைபெறும். 10-வது நாளான தை1-ஆம் தேதி உத்தராயண புண்யகால பூஜை நிறைவு பெறும். தொடர்ந்து, திருவூடல், மறுவூடல் ஆகியவை நடைபெறும்.

Related articles

Recent articles

spot_img