ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்ற கோயில் மரியாதை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
srirangam andal vasthram1 - 2026
படம்: ராமலிங்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியாருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கோயில் மரியாதைகள் இன்று அனுப்பி வைக்கப் பட்டன.

வரும் ஆக.4 ஞாயிறு அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் திருத்தேர் உத்ஸவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து ஆண்டாளுக்கான கோயில் மரியாதைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

srirangam andal vasthram - 2026
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திர மரியாதை (படம்: ராமலிங்கம்)

ஆக.2 வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதைகளை எடுத்துக் கொண்டு, திருக்கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் திருக்கோயிலார் திருவில்லிபுத்தூர் புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.