‘பெரியவாளின்யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்’ சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) அப்போவெல்லாம் யாத்திரை போறபோது மூணு குதிரை போகும்.சவாரி குதிரை-ன்னு ஒண்ணு. இன்னொண்ணு – டங்கா குதிரை. ஊர் எல்லை வந்தவுடனே,அதிலே இருக்கிற ரெண்டு டங்காவையும் அடிப்பா.ஊர் ஜனங்களுக்குப் பெரியவா வந்துட்டான்னு தெரியணும் – என்கிறதுக்காக. மூணாவது- தபால் குதிரை. போஸ்டாபீஸ்லேர்ந்து, மடத்துத் தபால்களை வாங்கிண்டு வர- எழுதின தபால்களை போஸ்ட் பண்ண. கிராம எல்லை வந்ததும் கௌரிகாளை-ன்னு ஒரு வாத்யம் -ஊதுகிற வாத்யம் – வாசிப்பா- சத்தம் ரொம்ப தூரம் கேக்கும். 1944 காலகட்டத்திலே யாத்திரையிலே, இருபத்திரண்டு இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி போகும். முதல்லே, பூஜை வண்டி; கடைசியிலே கார்வார் வண்டி,குரு பாதுகை- ஒரு சின்ன வண்டியிலே வரும். அதுக்கு அரைவண்டி-ன்னு பேரு. பெரியவா பல்லக்கிலே இல்லேன்னா, அது கனக்கும்! பெத்த போகி குஞ்சுன்னு இருந்தான், “ஐயா ஏறிக்கணும்’னு கும்பிடுவான். “ஏண்டா?” “பல்லக்கு கனக்கிறது!….” “நான்தான் பல்லக்கிலே இல்லையே?” “ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தை வச்ச மாதிரி இருக்கும்…” அவனுக்காகப் பெரியவா பல்லக்கிலே ஏறிப்பா
‘பெரியவாளின் யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்’
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories