தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், ஐ, 2.0 என அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கியவர்.
சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை துவங்கினார். ஆனால், அப்படம் துவங்கியதிலிருந்து பல பஞ்சாயத்துக்களை சந்தித்தார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோக சம்பவமும் நடந்தது. மேலும், லைக்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 விலிருந்து அவர் விலக முடிவெடுதுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடித்து ஹிட் அடித்த திரைப்படமான ‘லூசிபர்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் அழைப்பு அவருக்கு வந்துள்ளதாம். மலையாளத்தில் இப்படத்தை நடிகர் பிருத்திவிராஜ் இயக்கியிருந்தார். அரசியல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்பதால் ஷங்கர் இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாலிவுட்டில் ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸ் படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற தலைப்பில் ஷங்கர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



