பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.

Published:

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. 
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோம், 6 மணிக்கு கொடியேற்றம் தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அபிஷேகம் உச்சிகால பூஜை தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தீபாராதனை 7 மணிக்கு அர்ச்சனை நடைபெறுகிறது.
தொடர்ந்து 25ம்தேதி வரைதினமும்  மதியம் 12மணிக்கு அபிஷேகம் உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. தினமும் மாலையில் தீபாராதனை நடைபெறுகிறது. 
சூரசம்ஹாரம்
25ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.  26ம் தேதி  வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல். மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை தீபாராதனை. மாலை 6 மணி க்கு காட்சி அருளல் இரவு 7 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர் 
ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img