spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: முகத்தைப் பிலுக்கி – திருக் கயிலை!

திருப்புகழ் கதைகள்: முகத்தைப் பிலுக்கி – திருக் கயிலை!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி 331
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முகத்தைப் பிலுக்கி – திருக் கயிலை

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி நான்காவது திருப்புகழான “முகத்தைப் பிலுக்கி” எனத் தொடங்கும் திருப்புகழ் திருக்கயிலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருக் கயிலை முருகா, மாதர் மயக்கம் அற அருள் புரிவாயாக”என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து …… முசியாதே
முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த …… மளிமீதே
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி …… யணைவார்பால்
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
நயத்துத் தியக்கி நித்த …… மழிவேனோ
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி …… யெனஆடும்
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக் கினித்த சித்தி …… யருள்வோனே
மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
மிகுத்துப் பெயர்த்தெ டுத்த …… கயிலாய
மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
மிதித்துத் துகைத்து விட்ட …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற ஒலியுடன் திருநடம் புரிகின்றவரும், உலகத்தின் ஒப்பற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே; ஒருமைப்பட்ட உள்ளத்துடன் துதி செய்கின்ற அன்பர்களின் திருக்கூட்டத்துக்கு இனிய திருவருட் பேற்றினை அருள் புரிகின்றவரே; உறுதியுடன் மேற்சென்று அசைத்து பாரத்தைப் பொறுத்து இராவணன் அகந்தை மிகுந்து பேர்த்து எடுத்த திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியிருந்து, அதனை அடுத்துள்ள கிரவுஞ்ச மலையை இடித்துப் பொடி செய்து, அடக்கித் துவையலாக்கிவிட்ட பெருமிதம் உடையவரே; விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், அவர்கள்பால் மனதை வைத்து ஆசை பெருகி, அவர்களை நயந்து வேண்டியும், அவர்களால் கலக்கமுற்றும் தினந்தோறும் அடியேன் அழியலாமோ? இத்திருப்புகழில் அருணகிரிநாதர், நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி யருள்வோனே எனப் பாடுகிறார்.

இறைவனை அநேகர் நினைக்கின்றார்கள். ஆனால் பொன்னையும் பொருளையும் நிலபுலங்களையும் பிறவற்றையும் நினைத்த வண்ணம் இறைவனையும் நினைக்கின்றார்கள். வேறு எந்த நினைப்பும் இன்றி ஒருமைப்பட்ட உள்ளத்துடன் நினைக்க வேண்டும். அவ்வண்ணம் நினைத்து, அத் தியானத்தில் ஊற்றெடுத்த பேரின்ப வெள்ளம் பொங்கி வழியும்போது துதிகள் வெளிப்படும்.

அத்தகைய அடியார் குழாங்கட்கு இனிமையான இஷ்ட சித்திகள் அனைத்தும் முருகவேள் பன்னிரு கரங்களாலும் வழங்குவார். சிவபெருமானின் பக்தர்கள் யார் எனப்பார்த்தால் – துர்வாசர், கௌசிகர், பிரம்மா, மிருகண்டு முனிவரின் புத்திரர்கள், தேவேந்திரன், பாணாசுரன், ஹரி, சக்தி, கண்வர், அத்ரி, ததீசி, பிருஹஸ்பதி, கௌதமர் ஆகிய முனிவர்கள், ராமர்கள் (பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்), ஆகியோர் என்று கூறும் ஒரு சுலோகம் கூறுகிறது.

தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

பாசுபதர்கள் சிவாம்சம் பெற்றவர்கள் என்பது புராண வழக்கு. இதைப்போலவே சிறந்த விஷ்ணு பக்தர்கள் யார் என்பதற்கும் ஒரு சுலோகம் உள்ளது.

ப்ரஹ்லாதர், நாரதர், பராசரர், புண்டரீகர், வ்யாஸர், அ)ம்பரீஷர், சுகர், சௌநகர், பீஷ்மர் தால்ப்யர், ருக்மாங்கதன், அர்ஜுநன் வஸிஷ்டர், விபீஷணர் ஆகியோர் சிறந்த விஷ்ணு பக்தர்கள். இது குறித்தும் ஒரு ஸ்லோகம் உள்ளது.

ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக
வியாச அம்பரிஷ சௌநக பீஷ்ம தால்ப்யான்!
ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட வீபிஷ்ணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி!!

இதிலே அம்பரீஷனும், ருக்மாங்கதனும் இடம் பெற்றதற்குக் காரணமே அவர்கள் ஏகாதசி விரதம் அநுஷ்டித்ததுதான். ருக்மாங்கதன், விதர்ப்ப நாட்டு மன்னன். தன் ராஜ்யத்தில் அத்தனை பேரையும் ஏகாதசி விரதம் இருக்கும்படியாகப் பண்ணினான். அதனால் ப்ரஜைகள் எல்லோரும் பக்தி ஞானங்களில் முன்னேறியதோடு நல்ல ஆயுர்-ஆரோக்யங்களுடனும் இருந்தார்கள் என்று நாரத புராணத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe