அழகர் கோவில் ஆடித் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை!

ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
kallazhakar - 2026

அழகர்கோயில் ஆடி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிய வந்துள்ளது. மதுரை அழகர்கோயிலில் ஆடி திருவிழா ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் ஆடி திருவிழா வரும் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை 11 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக ஆடி திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், விழா நடைபெறும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 24ம் தேதி ஆடி பௌர்ணமி அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, மாலையில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரை ஆலயத்தில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கவும், மலை மீதுள்ள நூபுர கங்கையில் தீர்த்தமாடவும் தடை தொடர்வதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.