திருமலை ஏழுமலையானுக்கு நடந்த வசந்த உற்சவம்..

Published:

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.இதில் ஒன்று கோடை வசந்த உற்சவம் ஆகும்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வசந்த உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் இந்த ஆண்டு ஏழுமலையான் கோவிலில் அன்மையில் துவங்கி நடைபெற்றது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்புறம் இருக்கும் வசந்த உற்சவம் மண்டபத்தை தேவஸ்தான தோட்டத் துறையினர் சேஷாசலம் வனப்பகுதியை போல் அலங்கரித்திருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. உற்சவத்தின் முதல் நாளான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவில் மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் தர்பார் நடத்தப்பட்டது.

மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சமர்ப்பணங்களுக்கு பின் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை காலை திருப்பதி மலையில் கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க ரத உற்சவம் நடைபெற்றது.மூன்றாவது நாள் ஆன ஏப் 15இல் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா தேவி சமேத ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த வசந்த உற்சவத்தை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்

IMG 20220416 WA0103 - 2026
IMG 20220416 WA0010 - 2026
IMG 20220416 WA0006 - 2026
IMG 20220416 WA0097 - 2026
IMG 20220417 WA0008 - 2026

Related articles

Recent articles

spot_img