குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது . விழாவில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை, செங்கோல், தொண்டைமண்டல ஆதீனகர்த்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500  ஆண்டுகள் பழமை வாய்ந்த, சமயக்குரவர்கள் மூவரால் பாடல்பெற்ற அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது  ஆலயத்தின் திருப்பணிகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து இன்று காலை மஹா பூர்ணாகுதியுடன் தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கடங்கள் தருமபுர ஆதீனம் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கோயில் கருவறை கோபுரங்கள், ராஜகோபுரம், அம்பாள் முருகன் விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள் ஆகியவற்றின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை  செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ, அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான  பரமாச்சாரியா சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் மற்றும்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

IMG 20220508 WA0063 - 2026
IMG 20220508 WA0062 - 2026

Related articles

Recent articles

spot_img