திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்து வரும் ஆனிபிரமோற்சவ விழா முக்கிய விழாவாக கருட சேவை இன்று நடைபெற்றது.
திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிபிரமோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 13-ந்தேதி காலையில், தேரோட்டம் நடைபெறும். வரும் 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.