இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா துவக்கம்..

Published:

IMG 20220805 WA0088 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறும்.

ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 12ம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

IMG 20220805 WA0089 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img