

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று இரவு கோலகாலமாக துவங்கியது .
இக்கோவிலில் சிவன் சங்கரலிங்கமாக ஒரு சன்னதியிலும் ஹரியும் சிவனும் சரிபாதி இணைந்து சங்கரநாராயணராக ஒரு சன்னதியிலும் ,பார்வதி கோமதி அம்மனாக தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர் .
இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும் நேற்று இரவு நவராத்திரி முதல் நாள் பூஜை வழிபாட்டில் கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரித்து நவராத்திரி கொலுவுக்கு தீபாராதனை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை கோவில் நவராத்திரி விழா கமிட்டினர் செய்து வருகின்றனர்