
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமத்தில் உள்ள மலைக் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது .இதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று வெள்ளிக்கிழமை காலையில் மகாபூர்ணாபதி தீபாராதனைகள் நடைபெற்றன
இதனை தொடர்ந்து கோயில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கோவிந்ததாஸ் புருசோத்தம்தாஸ், எம்எல்ஏ க.சுந்தர், உள்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோவிலில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
