திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்!

Published:

Andal Rengamannar - 2026

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: இரண்டாம் பாசுரம்
வையத்து வாழ்வீர்காள்…

1 – இப்படி வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்‌ஷபலம் பெறாதொழிவானேன்!
நஞ்சீயர்
இவனுக்கு நரகமே, பெருமாள் ஆன்ருஸ்ம்ஸ்யத்தாலே ஸ்வர்கஸ்தனானான்
பட்டர்.
ஆறாயிரப்படி.
எம்பெருமானுடன் இருப்பே வையத்தில் வாழ்வு.இடைச்சியர்கள் இதைப் பெற்றார்கள்.தசரத சக்ரவர்த்தி பிரிவால் இழந்தார். அவருக்கு மோக்‌ஷம் கிடைக்கவில்லை.சுவர்க்கமே கிடைத்தது.
ஸ்ரீ நஞ்சீயர் பட்டரிடம் இதற்கு காரணம் கேட்க,
தசரத சக்ரவர்த்தி, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற சாமானிய தர்மத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். சாட்சாத் விசேஷ தர்மமான பெருமாளை காட்டுக்கு அனுப்பத் துணிந்தார்.

ராமோ விக்ரவான் தர்ம: இப்படி சாக்‌ஷாத் தர்மத்தை விட்டதால் அவருக்கு நரகமே சித்திக்க வேண்டியது. பெருமாளின் காருண்யத்தால் ஸ்வர்க்கலோகம் அடைந்தான்.
இதனால், எம்பெருமானே விசேஷ தர்மம்.அது ஏற்றம் என்றபடி.

II – செய்யாதன செய்யோம்.. .
ஆழ்வான் எங்கள் பூருவர்கள் தேவதாந்திர பஜனம் பண்ணாமையாலே என்றாராம். ஆறாயிரப்படி
எங்கள்.பூருவர்கள் செய்து போந்திலர் என்றார்.. நாலாயிரப்படி.

அதாவது எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாததேன் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானை சிலர் கேட்க

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

எங்கள் முன்னோர்கள்,பெரியோர்கள் இப்படி வேறு தெய்வத்தைத் தொழுவதில்லை என்று பதில் கொடுத்தாராம். வேறு தெய்வத்தைத் தொழுவது செய்யத்தகாத செயல் என்னும்படி.

  • வானமாமலை பத்மனாபன்

Related articles

Recent articles

spot_img