திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – மூன்றாம் பாசுரம்!

Published:

srirangam namperumal 1 - 2026

ஓங்கி… ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் போது ஸம்சாரிகள் இழவுக்குத் திருவுள்ளம் நொந்திருக்கும் என்று பட்டர் அருளிச்செய்ய, …நிரதிசய ஆனந்தனாய் இருக்கிற ஸர்வேஸ்சரனுக்கு ஒரு இழவு உண்டோ!
வ்ய்ஸனேஷு மனுஷ்யாணானி என்பது குணப் ப்ர்கரணமோ தோஷப் ப்ரகரணமோ என்றருளிச் செய்தார்.

அதாவது, பரமபத்தில் இருக்கும் போது எம்பெருமானுக்கு இந்த லீலா விபூதியில் இருக்கும் ஸம்சாரிகள் இன்னும் தன்னை வந்து அடையவில்லையே என்று எம்பெருமான் இரங்குவானாம்.

பரிபூரண ஆனந்த மயன், கல்யாண குணம் மட்டும் பொருந்தியவன், எவ்வித தோஷமும் இல்லா ஈஸ்வரனுக்கு இப்படி ஒரு குறை இருப்பது தோஷ்ம் இல்லையோ என்பது கேள்வி.

சம்சாரிகள் குறையும் துக்கமும் அவர்கள் வினைப்பயனால் உண்டாகின்றன. எம்பெருமானுடைய இந்த துக்கம் காருண்யத்தால் ஏற்படுவதால் இது குணமே ஆகும் என்றபடி.

II – பேர்பாடி … திரு நாமம் சொல்லுகைக்கு அதிகாரி சம்பத்து வேண்டாவோ என்று நஞ்சீயர் பட்டரை கேட்டருள யோக்கியன் ஆக இருந்தால் இருந்தபடி சொல்லுகிறான், அயோக்கியன் ஆனால் யோக்கியதை சம்பாதிக்க வேண்டா…

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அதாவது ஓங்கி வளர்ந்த உத்தமன் பேர்பாடி என்று எம்பெருமான் திருநாமத்தை சொல்லுவதற்கு தகுதி வேண்டாமா ?என்று வினா. இதற்கு பட்டர் உத்தரம் தெரிவிக்கையில் ஒருவனுக்கு தகுதி இருந்தால் அப்படியே திருநாமத்தை உச்சரிக்கலாம். இல்லையேல் விசேஷமாக தகுதி தேட வேண்டாம். திருநாமம் சொல்வதற்கு தனியாகத் தகுதி ஏதும் தேவை இல்லை என்றபடி.

  • வானமாமலை பத்மனாபன்

Related articles

Recent articles

spot_img