திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் எட்டாம் பாசுரம்!

திருப்பாவை
thiruppavai 8 - 2026

முலை எழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே பாவாய்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!

அதாவது ஸ்ரீ நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்கள், எம்பெருமான் மீது மிகுந்த பிரேமம் மிகும்போது அது பெண் பேச்சாக மாறி அனுபவம் செல்கிறது.
,
ஞானத்தில் தன் பேச்சு; ப்ரேமத்தில் பெண் பேச்சு – என்னும் ஸ்ரீ நாயனாரின் சூத்திரம் காண்க. அதாவது ஆழ்வார்கள் பக்தி பிரேமம் மிகும் போது அது பெண் பேச்சாக உருமாறுகிறது! பெண் ஆடை உடுத்து அனுபவம் மாறுகிறது.

இதற்கு மாறாக திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் இடைச்சி பாவனையில் இயல்பாகவே ப்ரேமம் கொண்டு பெண் பேச்சாக அமைவதால் திருப்பாவையில் இந்தப் ப்ரேமமும் பக்தியும் பெண்களுக்கே இயல்பாக பக்தி ப்ரேமம் இழைந்தோடுவது உணரலாம் என்றபடி.

(முலை எழுந்தார் .. பெண்கள்.. மோவாய் எழுந்தார்… ஆண்கள்) பட்டர் விடியுமதனையும் கண்வளர்ந்தருள, சிஷ்யர்கள் எல்லாரும் திரு வாசலிலே வந்திருக்குமா போலே எழுந்திராய்.. ஈராயிரப்படி வியாக்யானம்!

ஆண்டாள் நாச்சியார் பல கோபிகைகளுடன் தான் முன்னே எழுந்து பல பெண்களை எழுப்புகிறார். அப்படி இந்த இடத்தில் பெண் பிள்ளைகள் அவளை எழுப்புவது இப்படி திரளாக வந்து எல்லோருக்கும் பெரும் பேறு என்னும்படி இருக்கும் என்பதை தெரிவிக்க எப்படி ஸ்ரீ பராசர பட்டரை காலையில் எழுப்ப அவர் எழுந்து கொள்வதற்கு முன்னே சிஷ்யர்கள் பலரும் திரளாக எழுப்புவதற்கு வந்து இருப்பதுபோல் என்று அந்தப் பெரும் பேற்றை இதற்கு ஒப்புமை காட்டப்படுகிறது.

– வானமாமலை பத்மநாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.