ஈசனே, நீ பழமைக்கு பழமையான முதல்வன், இனி தோன்றிய தோன்றபோகிற எல்லாவற்றுக்கும் புதுமையானவன். உன்னைப் பிரானகப் பெற்ற நாங்கள் உன்னுடைய நல்ல அடியார்கள். நாங்கள் உன் அடியவர்களை வணங்குவோம், அவர்களே எங்கள் நண்பர்கள், அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம். இப்படி எங்களுக்கு நீ அருள் செய்தால் எங்களுக்கு எந்த குறையும் வராது! என்று ஈசனிடம் வேண்டுகிறார்கள்.
நாமும் இந்த மார்கழியில் ஈசனை காதலோடும், பக்தியோடும் துதித்து குறைவில்லா வாழ்வினை பெறுவோம்!


