சென்னையில் இன்று தொடங்குகிறது மாநில ஜூனியர் தடகளம்

Published:

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜே.ஒன். 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 1-ந்தேதிவரை 3 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது.

14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறுவர், சிறுமியருக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் போட்டியின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் செப்டம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெறும் 31-வது தென் மண்டல ஜூனியர் போட்டி, மற்றும் திருவண்ணாமலையில் செப்டம்பர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை நடைபெறும் 17-வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் போட்டி ஆகியவற்றுக்கான தமிழக ஜூனியர் அணி தேர்வு செய்யப்படும். மாநில ஜூனியர் தடகள போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img