ஏடிஎம்-மில் ரூ.10,000திற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கனரா வங்கி புதிய கட்டுபாடு ஒன்றை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கனரா ஏடிஎம்மில் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்க வேண்டும் எனவும் விரைவில் இது அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.



