instagram
instagram

இந்தியாவில் கிரிக்கெட்டின் மதிப்பு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கு சினிமாவும், கிரிக்கெட்டும் தான் என்றைக்கும் டாப் லெவல் பொழுதுபோக்கு.

அப்படிப்பட்ட கிரிக்கெட்டில், இன்று இந்தியாவின் டாப் மோஸ்ட் ஹீரோவாக இருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல. களத்திற்கு வெளியேவும் கூட இன்றைய தேதிக்கு அவர் தான் ராஜா.

இந்நிலையில், சமூக தளமான இன்ஸ்டாகிராமில், ஒரு போஸ்ட் போடுவதற்கு அதிக தொகை பெறும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலை HopperHQ’s 2021 வெளியிட்டுள்ளது.

அதவாது, இன்ஸ்டாகிராமின் பணக்கார பிரபலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சன் (ராக்) உள்ளார். இவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.11 கோடி ஊதியமாக பெறுகிறார்.

13 August01 kholi
13 August01 kholi

மூன்றாம் இடத்தில் பாப் பாடகர் அரியானா க்ரநேட் உள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. 19வது இடத்தில் இருக்கும் கோலி, ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்குகிறார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத இந்த தொகையை, ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் ஒரு நிமிடத்தில் சம்பாதிக்கிறார் கோலி.

இந்த பட்டியலில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 27வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.3 கோடி பெறுகிறார்.

பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியர் விராட் கோலி மட்டுமே. மொத்தம் உள்ள 395 பிரபலங்கள் பட்டியலில், விராட் கோலி தவிர, வேறு எந்தவொரு இந்திய கிரிக்கெட்டரும் இந்த பட்டியலில் இல்லை.

priyanka chopra
priyanka chopra

அதேசமயம், டி வில்லியர்ஸ், டு பிளசிஸ், டேல் ஸ்டெய்ன் ஆகிய மூன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற விளையாட்டு வீரர்களில், இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு அர்ஜென்டினா கால்பந்து ஹீரோ மெஸ்ஸி 8.6 கோடியும், பிரேசிலின் நெய்மர் 6.1 கோடியும் பெறுகின்றனர்.

நம்மால் எத்தனையோ பேருக்கு இன்ஸ்டாகிராமில் நிச்சயம் அக்கவுண்ட் கூட இருக்காது. ஆனால், இங்கு ஒரு போஸ்ட்டுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் பாருங்கள்.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending