ஐபிஎல்: முன்னேறிய தில்லி; பின்சென்ற ஹைதராபாத்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 36ஆவது ஆட்டம் – டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நேற்று சனிக்கிழமை. எனவே இரண்டு ஆட்டங்கள். முதல் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ்க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கும் இடையே அபுதாபியில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் டெல்லி அணியை பேட்டிங் செய்யச்சொன்னது. ராஜஸ்தான் அணியின் திறமையான பந்து வீச்சினால் டெல்லி அணி 20 ஓவரில் 154 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷ்ரயாஸ் ஐயர் (43), ரிஷப் பந்த் (24), ஹெட்மியர் (28) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது, அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள். அணித்தலைவர் சஞ்சு சாம்சன் பாவம் அதிர்ஷ்டமில்லாதவர். இரண்டாவது ஓவரில் விளையாட வந்து, கடைசி வரை அவுட்டாகமல் நின்று, 70 ரன் அடித்து அவரால் அவரது அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 70 ரன்; பாக்கியுள்ளவர்கள் 41 ரன்.

ஆட்ட முடிவில் டெல்லி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது. அநேகமாக டெல்லி அணி அரையிறுதிக்குச் செல்லும்.

ipl2021
ipl2021

இரண்டாவது ஆட்டம்

இது பஞ்சாபிற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே ஷார்ஜாவில் நடைபெற்றது. பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யச் சொன்னது.

பஞ்சாப் 20 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்தது. ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கட் எடுத்தார். இவ்வளவு சிறிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி எளிதில் எடுத்துவிடும் என்று அனைவரும் நினைத்தபோது அந்த அணி 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் வார்னர் (2), கேன் வில்லியம்ஸ் (1) போன்ற மாபெரும் வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர்.

விருத்திமான் சாஹா 37 பந்துகளில் 31 ரன் அடித்தார். ஜேசன் ஹோல்டர் தடாலடியாக ஆடி 47 ரன் அடித்தார். பஞ்சாபின் பவுலர்கள் கஞ்சத்தனமாக பந்து வீசினர். ஷமி 4 ஓவர் 14 ரன்; அர்ஷதீப் 4 ஓவர், 22 ரன்; எல்லிஸ் 4 ஓவர் 32 ரன்; ஹர்ப்ரீத் 4 ஓவர் 25 ரன்; ரவி 4 ஓவர் 24 ரன்; என அனைவரின் எகானமி ரேட் மிகக் குறைவாக இருந்தது.

சன்ரைசர்ஸ் அணி இதுவரை 9 போட்டிகள் விளையாடி 2 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது. இனி வருகின்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதியில் இடம்பெறுவது கடினமே. எனவே சன்ரைசர்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது எனலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories