ind sa odi - 2026

இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி! தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

விளையாட்டு Featured உலகம்
ind sa odi - 2026

-> முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்


இன்று நடைபெற்ற ஒருநாள் பொட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ராகுல் (அணித்தலைவர்), தவான், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யஜுவேந்திர சாகல் ஆகியோர் விளையாடினர்.

வெங்கடேஷ் ஐயருக்கு இது முதல் டி20 ஆட்டம். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா ஆடவில்லை. அவருடைய இடத்தில் மார்கொ ஜேன்சன் விளையாடினார். பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி மட்டையாட முடிவு செய்தது. ஐந்தாவது ஓவரில் தொடக்க வீரர் மலான் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

க்விண்டன் டி காக் பதினாறாவது ஓவரில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 18ஆவது ஓவரில் மர்கரம் ரன் அவுட் ஆனார். நான்காவது விக்கட்டிற்கு பவுமாவும், டுஸ்ஸென்னும் ஜோடி சேர்ந்து 204 ரன் பார்ட்னர்ஷிப் போட்டனர். அணித்தலைவர் பவுமா 110 ரன் (143 மந்துகள், 8 ஃபோர்); டுஸ்ஸென் 129 ரன் (96 பந்துகள் 9 ஃபோர், 4 சிக்ஸ்). தென் ஆப்பிரிக்க அணி நூலு விக்கட் இழப்பிற்கு 296 ரன் எடுத்தது.

இந்திய பவுலர்கள் சுமாராக பந்து வீசினர். அவர்களால் விக்கட் எடுக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்த்தியில் கடைசி ஓவர்களில் அதிக ரன் கொடுத்தனர். சுமார் 38 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன் எடுத்திருந்தது.

அதன் பின்னர் அடுத்த 12 ஓவரில் 96 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெகுலர் மட்டையாளர்களில் தவான் 79 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் எடுத்தனர். பிற மட்டையாளர்கள் இன்று சரியாக ஆடவில்லை.

ராகுல் 12 ரன், ரிஷப் 16 ரன், ஷ்ரேயாஸ் 17 ரன், வெங்கடேஷ் 2 ரன் என நாலு ரெகுலர் மட்டையாளர்கள் இன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களெல்லாம் சொதப்பினாலும் ஓரளவு நன்றாக ஆடக்கூடிய அஸ்வின் (7 ரன்), புவனேஷ் குமார் (4 ரன்) ஆகியோரும் சரியாக விளையாடவில்லை.

ஷர்துல் (50 ரன்), பும்ரா (14) இருவரும் டி20 ஆட்டங்களில் தங்களது அதிக பட்ச ஸ்கோரை எட்டினர். தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது ஒரு ஸ்வீப் ஷாட்கூட இந்திய அணிவீரர்கள் அடிக்கவில்லை.

ஆனால் தென் ஆப்பிரிக்க மட்டையாளர்கள் இந்திய அணியின் அஸ்வினும், சஹாலும் பந்து வீசும்போது ஸ்வீப் ஷாட்டுகளாக அடித்துத் தள்ளினர். மொத்தத்தில் இன்று இந்திய் அணியின் பேட்டிங் ஃபெயிலியர் என்று சொல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.