IPL 2022: பட்லரின் சதம்; சஹாலின் ஹாட்ரிக்

Published:

ipl 2022 - 2026

-K.V. பாலசுப்பிரமணியன் –

ஐபிஎல் 2022: கொல்கொத்தா vs ராஜஸ்தான்
பட்லரின் சதம்; சஹாலின் ஹாட்ரிக்

நேற்று, ஏப்ரல் பதினெட்டாம் நாள் கொல்கொத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 30ஆவது போட்டி நடந்தது. ராஜஸ்தான் அணி (217/5, ஜாஸ் பட்லர் 103, சஞ்சு சாம்சன் 38, சுனில் நரேன் 2/21) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் (19.4 ஓவரில் 210 ரன்களுக்கு ஆலவுட், ஷ்ரேயாஸ் ஐயர் 85, ஆரோன் ஃபின்ச் 58, சஹால் 5/40, மெகாய் 2/41) தோற்கடித்தது.

டாஸில் வெற்றிபெற்ற கொல்கொத்தா அணி ராஜஸ்தான் அனியை மட்டையாடச் சொன்னது. ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்ப்ளே ஆறு ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 60 ரன் எடுத்தது.

50 ரன்களை 32 பந்துகளிலும் 100 ரன்களை அடுத்த 30 பந்துகளிலும், 150 ரன்களை அடுத்த 25 பந்துகளிலும் 200 ரன்களை அதற்கடுத்த 29 பந்துகளிலும் எடுத்தது.

ஜாஸ் பட்லர் 61 பந்துகளில் 5 சிக்சர், 9 ஃபோர்களுடன் 103 ரன் எடுத்தார். அடுத்து விளையாட வந்த கொல்கொத்தா அணி ராஜஸ்தான் அணியை விட ரன்ரேட் பல ஓவர்களில் அதிகமாகவே பெற்றிருந்தது. இருப்பினும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

பவர் ப்ளேயில் ஒரு விக்கட் இழப்பிற்கு 57 ரன். முதல் பாலில் சுனில் நரேன் ரன் அவுட் ஆனார். ஆரோன் ஃபின்ச் (58 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (85 ரன்), நித்தீஷ் ராணா (18 ரன்) உமெஷ் யாதவ் (21 ரன்) ஆகியோரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டவில்லை.

17ஆவது ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சஹால் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளில் ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சஹால் ஒரு ஹாட்ரிக் எடுத்தார்.

இறுதி ஓவரை வீசிய ஒபட் மெக்காய் இன்று முதன் முறையாக ஐ.பி.எல் மேட்ச் ஆடுகிறார். 11 ரன்னை டிஃபண்ட் பண்ணவேண்டிய பெரிய பொறுப்பு அவர் தலையில் விழுந்தது. அவர் திறமையாக பந்திவீசி இரண்டு விக்கட்டுகள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளி 8 புள்ளிகளுடன் இரண்டு முதல் ஐந்து வரையிலான இடத்திலும் இருக்கின்றன.

Related articles

Recent articles

spot_img