ipl 2022 - 2026

IPL 2022: பெங்களூரு Vs சென்னை

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – பெங்களூரு vs சென்னை
– கே.வி. பாலசுப்பிரமணியன் –

நேற்று, மே நான்காம் நாள் பெங்களூரு, சென்னை அணிகளுக்கிடையே புனே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 49ஆவது போட்டி நடந்தது.

பெங்களூரு அணி (173/8, மஹிபால் 42, ட்யூ பிளேசிஸ் 38, கோலி 30, தீக்ஷணா 3/27, மொயின் அலி 2/28) சென்னை அணியை (160/8, கான்வே 56, கெஉக்வாட் 28, மொயின் அலி 34, ஹர்ஷல் படேல் 3/35) வென்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பெங்களூரு அணியை மட்டையாடச் சொன்னது. விராட் கோலியும், ட்யூ பிளேசிஸும் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். அதன் பின்னர் மஹிபால் லோம்ரர், ரஜத் படிதரருடனும் தினேஷ் கார்த்திக்குடனும் இணைந்து நன்றாக ஆடினார்.

கார்த்திக் கடைசி ஓவரில் 16 ரன் அடித்து அணியின் ஸ்கோரை இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 173 என்ற அளவிற்குக் கொண்டுவந்தார். சற்றே கடினமான இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு கெய்க்வாட் (28 ரன்), கான்வே (56 ரன்), மொயின் அலி (34 ரன்) அடித்தனர். இவர்கள் அடித்த மொத்த ரன் எண்ணிக்கை, 118. மற்ற வீரர்கள் அடித்த ரன் எண்ணிக்கை 38, உதிரிகள் 4. இதன் விளைவு என்னவெனில் சென்னை அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

இந்த வெற்றியின் காரணமாக பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான் காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது (கீழிருந்து மேலாக இரண்டாவது இடம்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.