health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சதை பிடிக்க, கால் வீக்கம், பல் சொத்தை, தொண்டை கரகரப்பு, வயிற்றுப் பூச்சி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

சதை பிடிக்க வேண்டுமா?

வெறும் வயிற்றில் வேப்பங் கொழுந்து அல்லது வேப்பம்பூவை ஊற வைத்த கொண்டைக் கடலை சாப்பிடலாம். தினசரி பத்து வில்வக் கொழுந்து களையும் சாப்பிடலாம். பூசணி. உளுந்தம் பருப்பு. கடலைப் பருப்பு, மொச்சை, அவரை, நெய், மோர் ஆகியவற்றை உணவில் அதிக அளவு சேர்த்து வர உடல் சதை பிடிக்கும்.

சாதாரண கால் வீக்கம் சரியாக…

கால்களை உயர வைத்து படுத்துக் கொள்ளவும். கால்மணி நேரம் கழித்து கால்களை சிறிது உப்பு கலந்த குளிர்ந்த நீரில் அமுங்கும் படி சிறிது நேரம் வைத்திருக்க வீக்கம் குறையும்.

முட்டைக்கோஸ் மகத்துவம்

பற்கள் சொத்தையாகாமல் முட்டைக்கோஸ் காக்கிறது. அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இதனை பச்சையாகவே நறுக்கி சாப்பிடலாம்.

வயிற்றுப் பூச்சிக்கு…

வேப்பம்பூவை கஷாயம் வைத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் அரை தம்ளர் சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். பித்தம் நீங்கி வாதம் போகும். பசி எடுக்கும். தொற்று நோய் அணுகாது.

தொண்டை கரகரப்புக்கு…

திப்பிலியைத் தூள் செய்து சிறிதளவு தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர தொண்டைக் கம்மல் உடனே நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.