லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகு அரிசி கேரட் சாதம்!

Published:

panivaraku carrot rice - 2026

வரகு அரிசி கேரட் சாதம்
தேவையான பொருட்கள் :
கேரட் – 4
உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் – 2 கப்
வெங்காயம் – 2
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 6 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
முந்திரி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு (வெட்டியது)

செய்முறை :

கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும்.

கேரட் நன்றாக வெந்த பின்னர் வேக வைத்த வரகு அரிசியை அதில் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான வரகு அரிசி கேரட் சாதம் ரெடி.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

Related articles

Recent articles

spot_img