ipl 2022 - 2026

IPL 2022: டெல்லி Vs பஞ்சாப்

விளையாட்டு
ipl 2022 - 2026

ஐ.பி.எல் மே 16, 2022 – டெல்லி vs பஞ்சாப்
– K.V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 64ஆவது ஆட்டம் மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கிடையே நடந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணி (159/7, மைக்கேல் மார்ஷ் 63, சர்ஃப்ராஸ் கான் 32, லலித் யாதவ் 24, லிவிங்ஸ்டோன் 3/27, அர்ஷதீப் சிங் 3/37) பஞ்சாப் கிங்ஸ் அணியை (142/9, ஜித்தேஷ் ஷர்மா 44, பெய்ர்ஸ்டோ 28, சாஹர் 25, தாகூர் 4/36, படேல் 2/14, குல்தீப் 2/14) 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. எனவே டெல்லி அணி மட்டையாட வந்தது. டேவிட் வார்னர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கட்டாக சர்ஃப்ராஸ் கான் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 51/2. மூன்றாவதாக வந்த லலித் யாதவும் மார்ஷும் மிக நன்றாக விளையாடினார்கள்.

11ஆவது ஓவர் முடிவில் லலித் யாதவும், 12ஆவது ஓவர் முடிவில் ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தனர். போவல்லும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 14 ஓவர் முடிவில் 112/5. அதன் பின்னர் டெல்லி அணியின் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்த ஐந்து ஓவர்களில் முறையே, 1 ரன், 7 ரன், 11 ரன், 15 ரன், 3 ரன், 7 ரன் – மொத்தம் 44 ரன் மட்டுமே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. 160 ரன் என்பது எளிய இலக்குதான்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பெய்ர்ஸ்டோ (28 ரன்), ஷிகர் தவான் (19 ரன்) நன்றாக ஆடினார்கள். ஆனால் பானுகா (4 ரன்), லிவிங்ஸ்டோன் (3 ரன்), மயங்க் அகர்வால் (பூஜ்யம்), ஹர்ப்ரீத் ப்ரார் (1 ரன்), ரிஷி தவான் (4 ரன்) ஆகியோர் சரியாக விளையாடததால். 42 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 18ஆவது ஓவரில் ஜித்தேஷ் ஷர்மாவும் (44 ரன்), ராபாடாவும் (6 ரன்) ஆட்டமிழந்தனர்.

19ஆவது ஓவரை நார்ஜே வீசினார்; ஆனால் 3 ரன் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே பஞ்சாப் அணி தோல்வியுற்றது.

புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிற அணி.

பிற அணிகளின் இன்றைய நிலை அடுத்து வருகின்ற ஆட்டங்களில் மாறலாம். சென்னை அணியும் மும்பை அணியும் அடுத்த சுற்றுக்குச் செல்லாது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.