priyanka 1 - 2026

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரியங்கா.

இவர் வேற்று சமூகத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

தற்போது பிரியங்கா கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பூவரசனை காணவில்லை. கணவரை எங்கும் தேடியும் கிடைக்காததால் பிரியங்கா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

mullai aru 1 - 2026

கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்திற்கு சென்று, நீண்ட நேரம் பிரியங்கா அழுதுகொண்டிருந்துள்ளார்.

அப்போது முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பிரியங்காவை ஓடிவந்து காப்பாற்றியுள்ளனர்.

அவர் லோயர்கேம்ப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் குடும்பம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending