கணவனையே விட்டு விட்டு வந்தவளை அம்மி கல்லால் கொன்ற காதலன்!

கிரைம் நியூஸ் தமிழகம்
murder 1 - 2026

விழுப்புரம் மாவட்டம் கல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் பெங்களூரில் பெயிண்டராக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும் பெங்களூரு ராம்ராஜ் பேட்டையில் வசிக்கும் ஹரிஷ் என்பவரின் மனைவி ஸ்வேதா என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்த இவர்கள் ஜாலியாக ஊர் உலகத்தைச் சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி சுபாஷ், ஸ்வேதாவை தமது சொந்த ஊரான கல்லந்தலுக்கு அழைத்து சென்றுள்ளார். அன்றிரவு போதையிலிருந்த சுபாஷுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

dead body - 2026

இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் விறகு கட்டையால் ஸ்வேதாவை தலையில் அடித்துள்ளார். இதில் ஸ்வேதா மயங்கி விழுந்துள்ளார். மயக்கமாக இருந்த ஸ்வேதாவின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சுபாஷை கைது செய்ததோடு, ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.