கழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை! கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த பரிதாபம்!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
toilet - 2026

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மணிமாறன் அவரது உறவினர்களுடன் நேற்று வெளியே சென்று காரில் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது பெத்தானியாபுரம் பைபாஸ் அருகே இருந்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்த கழிவறையை உபயோகிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் கையிலிருந்த கார் சாவி கழிவறைக்குள் விழுந்ததால் மணிமாறன் அதனை எடுக்க முயன்றுள்ளார்.

toilet 1 - 2026

அப்போது அவர் கை உள்ளேயே சிக்கிக் கொண்டதால் மணிமாறன் கத்தியுள்ளார். உடனே அங்குச் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கையை வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், எடுக்க முடியவில்லையாம்.

இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் கழிவறையை உடைத்து அவரின் கையை வெளியே எடுத்துள்ளனர். இதனிடையே மணிமாறன் மயக்கமடைந்து விழவே அவருக்கு முதலுதவி கொடுத்துக் காப்பாற்றியுள்ளனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.