கொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்!

tanjavur - 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த, தில்லி மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேஷியா, பெங்களூரு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 38 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிராம்பட்டினம், நெய்வாசல், கும்பகோணம், அண்ணலக்ரஹாரம், மேலத்திருப்பூந்துருத்தி பகுதிகளைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசிப்பிடங்கள், சுற்று வட்டார கிராமங்கள் என 20 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தில்லியில் தனியார் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் வந்த விமானத்தில் மார்ச் 24-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.

சந்தேகத்தின்பேரில் தாமாகவே மருத்துவப்பரி சோதனைக்கு முன்வந்த இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

திருவாரூர், நாகையில்…

திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினர், வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என 109 பேர் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக் கப்பட்டனர். அவர்களில் 26 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத் துக்குப் பின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியது:

மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் வசிப்பிடங்களைச் சுற்றிலும் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றார்.கறம்பக்குடியிலும் கடைகள் மூடல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பால், மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

இதனால், ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு வரத்தொடங்கினர்.

இதையடுத்து, கறம்பக்குடி பகுதிகளிலும் பால், மருந்துக் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் காலை 8.30 மணிக்குள் அடைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories