மதுரை: கஞ்சா விற்பனை செய்த காவலர்! கைது!

தமிழகம் பொது தகவல்கள்
cancha 1 - 2026

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் கஞ்சா விற்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரவீன் (26) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

praveen - 2026

உடனடியாக பிரவீனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரவீன் 2014ஆம் ஆண்டில் வழிப்பறி வழக்கில் பணியிடை நீக்கம் செய்யபட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடக்கிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் காய்ச்ச ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்? இந்து முன்னணி அதிருப்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.