deadbody

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே மேலசொக்கநாதபுரம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 65 வயதான கூலித்தொழிலாளியான முருகன் என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த நாளன்று குடும்பத்தில் வாக்குவாதம் அதிகரித்து உள்ளது. இதனால் அவர் வீட்டை விட்டு கோபித்து கொண்டு வெளியே வந்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் முருகனை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது போடியில் உள்ள சன்னாசிபுரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மர்மமான முறையில் முருகன் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending