
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி. 17 வயதான அவர், 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி என்பதால் துடித்து கொண்டிருந்தார். நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்தனர்.
அவரை செக் செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாசம் கர்ப்பம் என்று சொன்னார்கள். மேலும் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர். அவர்கள் விரைந்து வந்து ஆஸ்பத்திரிக்கு வந்தனர். சிறுமியையும், அவரது அம்மாவையும் விசாரித்தனர்.
சிறுமியின் பக்கத்து வீட்டிலேயே அண்ணன் உறவு முறையான 19 வயதானவருடன் பழகி வந்துள்ளார். அவர் பெயர் சஞ்சீவி. நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள், உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். யார் எதிர்த்தாலும் சரி, உன்னையே கல்யாணம் செய்வேன்” என்று சொல்லியே சிறுமியை வலையில் வீழ்த்தி உள்ளார்.
அந்த பேச்சில் மயங்கிய சிறுமியும் இளைஞரை விரும்ப ஆரம்பித்தார். இருவரும் வெளியே ஊர் சுற்றினர். பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர் இருவரையுமே கூப்பிட்டு கண்டித்தனர். உறவுமுறையை எடுத்து சொல்லி அறிவுறுத்தினர்.
ஆனாலும் இருவரும் திருட்டு தனமாக பழகி வந்துள்ளனர். பலமுறை வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் சஞ்ஜீவ்வை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி. இறுதியில் தான் மகள் கர்ப்பம் என்று பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
அதனால் அபார்ஷன் செய்வதற்காக பரசேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களோ அபார்ஷன் செய்ய முடியாது அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி உள்ளனர். இதன் பிறகுதான் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரியவந்தது.
கர்ப்பத்துக்கு காரணமான சஞ்ஜீவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், தற்போது ஜெயிலும் அடைத்துள்ளனர். சிறுமியின் தாயாரிடம் தொடர் விசாரணை நடந்த வருகிறது. அதேபோல சிறுமிக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது!