7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! #JusticeforJayapriya வைரலாகும் ஹேஷ்டாக்!

கிரைம் நியூஸ் தமிழகம்
aranthanki

அறந்தாங்கி அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகூரான், செல்வி தம்பதியினர். இவர்களது 7 வயதேயான மகள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

ஆனால் இரவு 7 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அவரை வீட்டின் அருகில் உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிவரை தேடிய பொதுமக்கள் சிறுமியின் வீட்டின் பின்னால் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்த அவர்கள் உடலை மீட்டு உள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் உடல் கிடந்த அருகே ரத்தம் சிதறி இருந்துள்ளதாகவும் அங்கு பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரணையில் ஈடுபட்டார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவியுள்ள அவர்,” மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது! பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!”என கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில், பால்மணம் மாறாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது. சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.