புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ காலில் பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை!

Published:

cellphone speech - 2026

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பென்சாம். இவர் கடந்த 2018ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது விசாரணைக்காக இளம்பெண் ஒருவர் காவல்நிலையம் வந்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் பென்சாம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாட்ஸ்அப் மூலம் வீடியோ பேசிய பென்சாம் விசாரணை நடத்துவதாக கூறி ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

மேலும் காவல்துறை சீருடையில் இருந்த பென்சாம் தனது பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை செய்தும், கொஞ்சியும் பேசியுள்ளார்.

இது போல பல பெண்களிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. எனினும் பலர் பயம் காரணாக புகார் அளிக்க முன்வரவில்லை என தெரிகிறது. எனினும் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் சில மாதத்துக்கு பிறகு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால் அவர் சென்னையை அடுத்த புழல் போலீஸ் நிலையத்துக்கு இன்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் இது போல நடந்து கொண்டாரா என்பது குறித்து இப்போது உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவி போலீசார் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related articles

Recent articles

spot_img