சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ காட்டி மிரட்டல்! போக்சோவில் கைது!

Published:

kiranur - 2026

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், அவரது உறவுக்கார இளைஞரான முருகன் என்பவர் அச்சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மறைவான இடத்தில் வைத்து அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த ஆபாச படங்களை சிறுமியின் தாயிடம் காட்டி சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மூன்று நாட்கள் முருகனை நீதிமன்ற காவலில் எடுத்து உள்ள போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் ஏதேனும் பரப்பினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img