ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து, மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இரவு 7.15க்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 தினங்கள் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆளுநருடன் அலோசிக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்க்கப் பட்டிருந்தது.




