கட்சி பெயர் இதுதானா? – ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்

Published:

rajini

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். மேலும், வருகிற 31ம் தேதி கட்சி பற்றி அறிவிப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சியை துவங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்தில் ரஜினி சார்பில் ‘மக்கள் சேவை கட்சி’என பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ரஜினிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை செய்திகள் கசிந்தது.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” எனக்குறிப்பிட்டிருந்தார்.

எனவே, வெளியான செய்தி உண்மையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Source: Vellithirai News

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img