விரைந்து சென்ற காரை மடக்கி ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல்!

kantcha - 2026

போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போதைப் பொருட்களுடன் தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர்களைச் சுங்கச்சாவடி அருகே போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மனித உடலுக்குக் கேடு விளைவித்து உடல் நலனை பாதிக்கும் போதைப் பொருட்களான பான்பராக், ஹான்ஸ், குட்கா, மாவா உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுபோன்ற போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைக் கண்காணித்து போதைப்பொருள் விற்பனையை முழுமையாகத் தடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு, காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது

அதன்பேரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தலைக் கண்காணித்து அதைத் தடுக்க ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் மீறி போதைப் பொருட்கள் கடத்தல் சமீபகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து லாரிகள், கார்கள், இருசக்கர வாகனம் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை வரை கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே எஸ்.பி. தனிப்படை போலீஸார் தடுப்புகளை அமைத்து நள்ளிரவு (ஆக. 07) கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை (ஆக. 08) 1.30 மணியளவில் அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 2 லாரிகள், 2 கார்கள் வந்தன.

அந்த வாகனங்களைத் தனிப்படை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அங்கு நிற்காமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்த வாகனங்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி அசூர வேகத்தில் சென்றன. தனிப்படை போலீஸார் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து விரட்டி வந்தனர்.

உடனடியாக ஆம்பூர் மற்றும் பள்ளிகொண்டா போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தடுப்புகளை பலப்படுத்திய போலீஸார் அங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீஸார் பெரிய படையைத் திரட்டி சுங்கச்சாவடி அருகே நிற்பதைத் தொலைவில் இருந்து கவனித்த லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் வாகனங்களைத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீஸார் காரில் இருந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, லாரி மற்றும் காரைப் பரிசோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகியவை அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைத்து சென்னைக்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

அதன்பேரில், பெங்களூரு லால்பாக் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர்களான சந்திரசேகர் (42), முனியன் (35) ஆகிய 2 பேரைக் கைது செய்த பள்ளிகொண்டா போலீஸார் லாரி மற்றும் கார்களுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற லாரி மற்றும் கார்களை விரட்டிச் சென்று 2 பேரை போலீஸார் கைது செய்த இச்சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories