மசூதிக்கு ஒரு நீதி; கோயிலுக்கு ஒரு நீதி – திமுக.,வின் நிலைப்பாடு இதுதான்!

Published:

stalin stage - 2026

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பொழுது இஸ்லாமியருடைய தொழுகை நேரம் இரவு 8மணி பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய உரையை நிறுத்துகிறார்.

முஸ்லிம்களின் தொழுகை முடிந்த பின்னர் தன்னுடைய பேச்சை தொடர்கிறார். இது இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை மதிக்கும் திமுக.

ஆனால்  தமிழ் புத்தாண்டு தினமான இன்று காஞ்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் செய்வதற்காக சென்ற பொழுது அருகில் இருந்த அனுமார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றிருக் கிறார்.

இந்த அனுமார் கோவிலுக்கு அருகே பிரச்சாரத்திற்காக தி மு க ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி அவர்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் என்பவர் காவல் ஆய்வாளர் சுரேஷ் என்பவரிடம் யோவ் நீ எப்படி அனுமதி கொடுக்கலாம் நீ? எப்படி கோவிலுக்கு போற ஓபிஎஸ்-க்கு எப்படி நீ அனுமதி கொடுத்த ..? என்று ஒருமையில் ஆபாசமாக மிரட்டல் விடுக்கும் வகையில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து , மிகவும் கேவலமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் நடந்து நடந்து
கொண்டிருக்கிறார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இது வன்மையான கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தேர்தலில் வெற்றி பெற்று வருவதற்கு முன்பாகவே இவர்கள் ஆடக்கூடிய ஆட்டம் இப்படி என்றால் நாளை இவர்கள் தேர்தலில் வென்று விட்டால் எப்படி எல்லாம் அராஜகங்களை ஈடுபடுவார்கள்? என்று அங்கு இருக்கக் கூடிய பொதுமக்கள் பேசக் கூடிய பேச்சை கேட்க முடிந்தது.

இதை ஏன் நான் சுட்டிக் காட்டுகிறேன் என்றால் ஸ்டாலின் இஸ்லாம் வழிபாட்டை மதித்து தொழுகையை மதித்து பேச்சை அப்படியே நிறுத்துகிறார் . இவர் சார்ந்த கட்சி எம்எல்ஏ.,வோ மிரட்டுகிறார் . இவர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

பிரியாணி கடைக்கு சென்று மன்னிப்பு கேட்டவர் இந்த காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்பாரா?

ஒரு கற்பனைக்காக கேட்கிறேன். தமிழ்நாடு துணை முதலமைச்சர்  திரு ஓபிஎஸ் அவர்கள் ஒருவேளை மசூதிக்குச் சென்று வாக்கு சேகரிக்க சென்றிருந்தால்  அந்த நிலையில் இதே திமுக எம்எல்ஏ நீ மசூதிக்கு போனாலும் சரி இல்ல தலைக்கு மேல இருப்பதற்கு போனால் சரி என்று பேசுவாரா ? இல்லை அராஜகம் செய்வாரா? யோசித்துப்பாருங்கள்

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களை! திமுக இந்து விரோதி என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?

தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

–  இராம இரவிக்குமார்
நிறுவனதலைவர். இந்து தமிழர் கட்சி

Related articles

Recent articles

spot_img