அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி!

Published:

Samsung Galaxy A52S5G
Samsung Galaxy A52S5G

தற்போது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.

இந்த சாதனம் கடந்த வாரம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மட்டுமே இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளயிட்டுள்ள தகவலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி சாதனம் ஆனது இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.35,999-விலையிலும், பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் ரூ.37,499-விலையிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு OneUI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்போன்மாடல்.

அதேபோல் இந்த கேலக்ஸி ஏ52எஸ் சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img