spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ராணுவத்தில் இணைந்த பிரசண்ட! அர்ப்பணித்த பிரதமர் மோடி!

ராணுவத்தில் இணைந்த பிரசண்ட! அர்ப்பணித்த பிரதமர் மோடி!

- Advertisement -

ப்ரசண்ட….

முழுக்க முழுக்க நம் இந்திய தேசத்திலேயே தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களான….. #ப்ரசாந்த் எனப் பெயரிடப்பட்ட ஹெலிகாப்டர்களை நம் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் நம் பாரதப் பிரதமர்.

எப்படி நம் இந்திய தயாரிப்பு இலகுரக தேஜாஸ் விமானங்களுக்கு உலக நாடுகளிடம் ஏகபோக வரவேற்பு இருந்ததோ அது போலவே தான் இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களையுமே கொண்டாடுகின்றனர் ராணுவ மட்டத்தில்.

செயல்திறன்…. தரத்தில்….. அமெரிக்க போயிங் நிறுவன தயாரிப்பு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விஞ்சி நிற்கிறது இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர். இமயமலை பிராந்தியத்தில் அநாயாசமாக செயல்படுவதாக குறிப்பிடும் அவர்கள்….இதனை கையாள்வதும் வெகு சுலபமாக இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்……

இதன் மூலம் இந்த பிராந்தியத்தில் சர்வ வல்லமை கொண்ட ராணுவ பயன்பாட்டிற்கு உகந்த எந்நேரமும் தாக்குதல் தயார் நிலையில் உள்ள…… அதாவது இரவு நேர தாக்குதல் திறன் கொண்ட ஹெலிகாப்டராக இது வெற்றிகரமாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறது என்கிறார்கள்.

ப்ரசாந்த் எனப் பெயரிடப்பட்டதற்கு வேறோர் காரணமும் உண்டு….. மிகக் கடுமையானது என்கிற பொருளில் வரும் இந்த பெயர்….. உலக அளவில் வலிமையான இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டராக விளங்குகிறது.

50 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 50 செல்சியஸ் வெப்பநிலையிலும் சர்வசாதாரணமாக இயங்குகிறது இந்த ஹெலிகாப்டர். போதாக்குறைக்கு இரட்டை இஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர் தான் உலகிலேயே முழு கொள்ளவுடன் அதாவது முழுமையான ஆயுததாரியாக ஐயாயிரம் மீட்டர் உயரத்தில்……. சரியாக சொன்னால் 5கிலோமீட்டர் உயரத்தில் அநாயாசமாக டேக் ஆஃப் ஆகுகிறது……. உச்சபட்சமாக 16,000 அடி உயரம் வரை பனிப் படர்ந்த பிரதேசத்திலும் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது என்கிறார்கள்.

உலகின் மற்றைய ஹெலிகாப்டர் அனைத்தும் இந்த இடத்தில் உச்ச பட்சமாக 14,500 அடி உயரம் வரை பறக்கும் திறன் பெற்றதாக அறியப்படுகிறது என்றால் நம்முடைய தொழில்நுட்ப பண்புகள் எத்தகையது என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

அத்தோடு விடவில்லை…… இந்த ஹெலிகாப்டரால் நின்ற வாக்கில் சட்டென்று பின்னோக்கி பறக்க முடியும்….. அதேசமயம் 180° பாகை கோணத்திற்கு திசை திரும்பவும் முடியும். தரை தாக்குதலுக்கு 20mm துப்பாக்கி பொருத்தப்பட்ட ஒரே இலகுரக ஹெலிகாப்டர் இதுவாகத்தான் இருக்கும். மேலும் இதனால் SAM ரக ஏவுகணைகளை துல்லியமான இயக்க முடியும்.

75 வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஓர் பகுதியாக இந்திய விமானப் படைக்கு , #ராஷ்டிரிய ரக்ஷசமார்பான்_பார்வ் விழாவில் வைத்து சம்பிரதாய கையளிப்பாக நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி கொடுத்தார். மொத்தம் 160 ஹெலிகாப்டர்களை இந்த முறையில் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.

அடுத்ததாக இதனை உள்நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏற்றக்குறைய ஒரு குட்டி தாக்குதல் விமானம் போல் இயங்கும் தன்மை கொண்டதாக இந்த ப்ரசாந்த் விளங்குகிறது என்று தாராளமாக சொல்லலாம்.

  • ஜெய் ஹிந்த்.ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,170FansLike
387FollowersFollow
92FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,300SubscribersSubscribe