திருமண மண்டபத்தில் குண்டுவெடிப்பு! 14 பேர் உயிரிழப்பு!

Published:

bomb blast kabul - 2026

திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பயங்கர குண்டு வெடித்ததில் 14 பேர்  உயிரிழந்துள்ளனர்! 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்கள் மோசமான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இது போன்று பொதுமக்களைக் கொன்று குவிக்கும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுப்பது வழக்கமான ஒன்று!

இந்நிலையில் பலர் உயிரிழப்புக்குக் காரணமான இந்த குண்டுவெடிப்பு மிகவும் கோழைத்தனமான  செயல் என்று உள்துறை அமைச்சர் நுஸ்ரத் ரஹிமி கூறியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இன்று காலை வரை உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த அரங்கில் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இது பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும், ஆப்கானிஸ்தானில்  இது போன்று குண்டுவெடிப்பு நிகழ்த்தி அதன் தாக்கத்தை வைத்து பயிற்சி செய்வது போல் பயங்கரவாதிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் பிரதிபலிப்பு மற்ற வெளிநாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img