ஆப்கன் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

afgan-attackஆப்கனின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு, வங்கி ஒன்றின் வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தத் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, அரசு ஊழியர்களும் ராணுவ வீரர்களும் தங்களது ஊதியத்தைப் பெறுவதற்காக நியு காபூல் பேங்க் என்ற அந்த வங்கிக்கு வெளியில் காத்திருந்தனராம். அப்போது, இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஜலாலாபாதில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.